Home > Work > தேசாந்திரி [Desanthiri]

தேசாந்திரி  [Desanthiri] QUOTES

1 " பழந்தமிழ் ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்றைய ஜெராக்ஸ் எனும் நகலெடுப்பு போல, இருநூறு வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஏட்டிலிருந்து நகல் எடுத்து இன்னொரு ஏட்டில் எழுதித் தருவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயர். அப்படி நகல் எடுத்து எழுதுபவர், தான் பிரதி எடுத்த ஏட்டின் கடைசிப் பாடலுக்குக் கீழே தனது முத்திரையாக, தனது பணியானது தமிழுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு செய்யும் சிறு ஊழியம் என்று ஒப்பமிட்டு, அதன் கீழே தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கும் முறை இருந்தது’’ என்றார். "

S. Ramakrishnan , தேசாந்திரி [Desanthiri]